Nach Genre filtern

Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Hello Vikatan

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

965 - ஸ்டாலின், அண்ணாமலையால் `டார்கெட்’ செய்யப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? News - 21/08/2024
0:00 / 0:00
1x
  • 965 - ஸ்டாலின், அண்ணாமலையால் `டார்கெட்’ செய்யப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? News - 21/08/2024

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. மத்திய அரசும் நாணயத்தை வெளியிட அனுமதி வழங்கியிருந்தது. அதன்படியே நாணயத்தின் வடிவமைப்பெல்லாம் முடிந்து, நாணயமும் அச்சிடப்பட்டது. இந்த நாணயம் வெளியிடும் விழாவுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று, தமிழக அரசும் கடந்த 18-ம் தேதி வெளியிட முடிவுசெய்தது.இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட்டார். திமுக அரசும், மத்திய பாஜக அரசும் கருத்தியல்ரீதியாக மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டிருந்த சூழலில், திமுக அரசு நாணய வெளியிட்டு விழாவுக்கு பாஜக அமைச்சர் ஒருவரை அழைத்தது பேசுபொருளானது. திமுக, பாஜக-வுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு திமுக தலைவரும் கடுமையாகச் சாடியிருந்தார். இந்த விவகாரத்தில் நடப்பதென்ன..?

    Wed, 21 Aug 2024 - 06min
  • 964 - விடுதலை சிறுத்தைகள் Vs நாம் தமிழர்... திடீர் மோதலின் பின்னணி என்ன? News - 20/08/2024

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் நாம் தமிழருக்கும் இடையேயான சமூக வலைதள மோதல் கடந்த சில நாள்களாக புதிய உச்சத்தை கண்டிருக்கிறது...``சீமானை மோசமாக வசைபாடுவதை ரசிக்கிறார் திருமாவளவன்’` என நா.த.க-வினரும், ``திருமாவளவன் மீது நாகரீகமற்ற தாக்குதலை நா.த.க-வினர் தொடுக்கின்றனர்” என வி.சி.க தரப்பும் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர். `நாங்கள் நட்புசக்தி` என ஒருவருக்கொருவர் பேசிவந்த நிலையில் ஏன் இந்த திடீர் மோதல் என விரிவாக விசாரித்தோம்.

    Tue, 20 Aug 2024 - 03min
  • 963 - `பாஜக-வும் திமுக-வும் ரகசிய உறவு வைத்திருக்கின்றன’ என்று அதிமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன..?

    `பாஜக-வும் திமுக-வும் ரகசிய உறவு வைத்திருக்கின்றன’ என்று அதிமுக வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன..?

    Mon, 19 Aug 2024 - 06min
  • 962 - எச்சரிக்கை விடுத்த முதல்வர்... கலக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள்..! - `திகுதிகு’ திமுக கூட்டம் News - 17/08/2024

    திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்லவிருக்கிறார். அவர் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்பாக அமைச்சரவைக் கூட்டமும் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கூட்டத்திலேயே, `அமைச்சர்கள் அனைவரும் சரியாக அவரவர் பணிகளைச் செய்ய வேண்டும். யார் என்ன செய்கிறார்கள் என்பதை நான் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறேன்’ என்று எச்சரிக்கும் தொனியில் பேசியிருந்தார்.

    Mon, 19 Aug 2024 - 02min
  • 961 - Taliban Rules | CringeTalks - 12

    2021-la Afghanistana Talibangal kaipatrina aprom, Talibangal neraya rules potrukanga...antha rules ennennanu therinjukalam...VAANGA KEKKALAM!

    -CringeTalks

    Sat, 17 Aug 2024 - 02min
Weitere Folgen anzeigen