Filtrar por gênero
- 11833 - ஆஸ்திரேலிய அஞ்சல்தலை விலை உயர்கிறது!
ஆஸ்திரேலியாவில் கடிதங்கள் மற்றும் முத்திரை விலைகள் அடுத்த ஆண்டு உயரும் என்று ஆஸ்திரேலியா போஸ்ட் அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Tue, 03 Dec 2024 - 02min - 11832 - இந்தியாவில் ஆஸ்திரேலிய பணத்தை போலியாக அச்சடித்த ஆஸ்திரேலியர் கைது!
ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மவுலிக் படேல் என்பவர், குஜராத்தில் ஆஸ்திரேலிய பணத்தாளை அச்சடித்து விற்பனை செய்ய முயற்சித்தபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக “இந்தியா டுடே” பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Tue, 03 Dec 2024 - 02min - 11831 - மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்புTue, 03 Dec 2024 - 04min
- 11830 - “மலையகத் தமிழர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டும்”
இலங்கையில் இடதுசாரி அரசியலை முன்னெடுப்பவர்களில் புதிய ஜனநாயக கட்சி (மா.லெ) எனும் இடதுசாரி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சிவ.இராஜேந்திரன் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர். மலையகத் தமிழர் பின்னணி சார்ந்த அவர், கல்வியியலாளர், ஓய்வு நிலை பீடாதிபதி, கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர், வருகை தரும் விரிவுரையாளர், தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர் என்று பல தகமைகளைக் கொண்டவர். அவரோடு உரையாடியவர்: றைசெல். நேர்முகம் – பாகம் 2.
Mon, 02 Dec 2024 - 08min - 11829 - “நாம் எடுத்துவர இருக்கும் பல படைப்புகளில் இது முதலாவது" - ‘ஓடு ஓடு' தயாரிப்பாளர்
சமூக புரொடக்ஷன்ஸ் சமீபத்தில் “ஓடு ஓடு” என்ற தலைப்பில் தமது முதல் காணொலியை வெளியிட்டது. அதன் தயாரிப்பாளர் செந்தூரன் தேவராஜா, இயக்குனர் துளசி ராமகிருஷ்ணசாமி மற்றும் பாடகர்கள் றோஹான் மற்றும் சத்தியன் இளங்கோ ஆகியோருடன் குலசேகரம் சஞ்சயன் பேசுகிறார்.
Mon, 02 Dec 2024 - 22min - 11828 - மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம், பெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கம்
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Mon, 02 Dec 2024 - 08min - 11827 - முப்பதுக்கும் மேற்பட்ட சட்டங்கள் ஒரே இரவில் மாற்றப்பட்டன. அவை எவை என்று தெரியுமா?
நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்படாத பல சட்ட முன்வரைவுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற Labor கட்சி அரசின் விருப்பத்தில் பல சட்ட முன் வரைவுகள் செனட் சபையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டன.
Mon, 02 Dec 2024 - 06min - 11826 - மெல்பனில் 'சிலப்பதிகாரம்' அரங்கப் படைப்பு!
பாரதி பள்ளியின் ஏற்பாட்டில் மெல்பனில் 'சிலப்பதிகாரம்' அரங்கப் படைப்பு டிசம்பர் 6 & 8ம் திகதிகளில் Drum Theatre, Dandenong-இல் மேடையேற்றப்படுகின்றது. இது தொடர்பில் இந்த அரங்கப் படைப்பை எழுதியவரான திரு மாவை நித்தியானந்தன் மற்றும் இதனை நெறியாள்கை செய்பவரான திருமதி பகீரதி பார்த்தீபன் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mon, 02 Dec 2024 - 12min - 11825 - “இடதுசாரி சிந்தனை தோல்வி என்கிறவர்கள், முதலாளித்துவம் அனைத்துக்கும் தீர்வு தரும் என்பார்களா?”
இலங்கையில் இடதுசாரி அரசியலை முன்னெடுப்பவர்களில் புதிய ஜனநாயக கட்சி (மா.லெ) எனும் இடதுசாரி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சிவ.இராஜேந்திரன் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர். மலையகத் தமிழர் பின்னணி சார்ந்த அவர், கல்வியியலாளர், ஓய்வு நிலை பீடாதிபதி, கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர், வருகை தரும் விரிவுரையாளர், தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர் என்று பல தகமைகளைக் கொண்டவர். அவரோடு உரையாடியவர்: றைசெல். நேர்முகம் – பாகம் 1.
Mon, 02 Dec 2024 - 20min - 11824 - Understanding how pharmacies operate in Australia - ஆஸ்திரேலியாவில் மருந்தகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
In Australia pharmacists dispense prescription medications and provide healthcare advice, educating the community on the use of medicines and disease prevention. - ஆஸ்திரேலியாவில், மருந்தாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குகிறார்கள், பாதுகாப்பான மருந்து பயன்பாடு மற்றும் நோய் தடுப்பு குறித்து சமூகத்திற்கு கல்வி புகட்டுகின்றனர். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்பட்சத்தில், உங்கள் மருத்துவர் மருந்துகளை பரிந்துரைத்தால், அடுத்தபடியாக நீங்கள் அருகிலுள்ள மருந்தகத்திற்குச் செல்வீர்கள். இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலியாவின் மருந்தக கட்டமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் மருந்தகத்திற்குச் செல்லும்போது என்னென்னவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதையும் பார்ப்போம்.
Mon, 02 Dec 2024 - 11min - 11823 - சர்வதேச நீதிமன்றத்தில் ஆஸ்திரேலியாவின் முக்கிய சாட்சி: காலநிலை நடவடிக்கையில் ஒரு மைல்கல்Mon, 02 Dec 2024 - 03min
- 11822 - "தொழில் நுட்பத்தின் அசுர வேகத்தில் தமிழ் மொழி சாகாது"
தமிழின் பழம்பெருமைபேசியே காலம் தள்ளாமல் இன்றைய நவீன காலத்திற்கு தமிழை முன்னெடுத்துச் செல்லும் நவீன சிந்தனைகொண்ட இளம் தமிழறிஞர் முனைவர் S சிதம்பரம் அவர்கள்.
Mon, 02 Dec 2024 - 14min - 11821 - ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு
இந்த வாரம் (24 –30 November 2024) ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளில் தொகுப்பு. 30 நவம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
Sat, 30 Nov 2024 - 04min - 11820 - கோவிட் விதிகளை மீறியதற்காக அறவிடப்பட்ட மில்லியன் கணக்கான அபராதத்தொகை திரும்ப வழங்கப்படுகிறது
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் COVID-19 கட்டுப்பாடுகளை மீறியதற்காக மில்லியன் கணக்கான டொலர்கள் அபராதமாக அறவிடப்பட்டிருந்த நிலையில் அவை மீளளிக்கப்படுகின்றன.இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Fri, 29 Nov 2024 - 02min - 11819 - இளையோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் முதல் நாடாகிறது ஆஸ்திரேலியா!
குழந்தைகள் மற்றும் பதின்மவயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாதவாறு தடை விதிக்கும் சட்டம் உலகிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் நடைமுறைக்கு வருகிறது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Fri, 29 Nov 2024 - 02min - 11818 - காரிலிருந்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை எப்படி பெறுவது?
Electric vehicle என்ற மின்வாகனத்திலிருந்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை உள்ளது என்றும், உபரி மின்சாரத்தை காரிலிருந்து grid என்ற மின்விநியோக supply அலகுக்கு செலுத்தி பணம் பெற முடியும் என்றும் கூறப்படும் தகவல் குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Fri, 29 Nov 2024 - 08min - 11817 - இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் அமைதியான முறையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன; வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் 23 மாவட்டங்களில் சீரற்றகால நிலை. இந்த செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Fri, 29 Nov 2024 - 08min - 11816 - 95 வயது முதியவரை ஆள்வதம் செய்த காவல்துறை அதிகாரி சிறை செல்வாரா?
ஒரு கத்தியைக் காட்டி மிரட்டிய 95 வயது முதியவர் Clare Nowland மீது taser பயன்படுத்தி அவரது மரணத்திற்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரி அவரைப் படுகொலை செய்தார் என்று 12 நீதிமன்ற தீர்ப்புக் குழு உறுப்பினர்கள் (jurors) கடந்த வாரம் தீர்ப்புக் கூறியிருந்தார்கள்.
Fri, 29 Nov 2024 - 06min - 11815 - சுமார் 40 சட்டங்களை ஒரே நாளில் செனட்சபை நிறைவேற்றியதுFri, 29 Nov 2024 - 04min
- 11814 - 19 வயது மனைவியைக் கொன்று உடலை அமிலத்தில் கரைத்த கணவர் கொலையை ஒப்புக்கொண்டார்
சிட்னியில் இரு ஆண்டுகளுக்கு முன்பு தனது 19 வயது மனைவியைக் கொன்று, உடலை அமிலத்தில் கரைக்க முயற்சித்த கணவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இது குறித்த பின்னணி தகவலை செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் றைசெல்.
Thu, 28 Nov 2024 - 07min - 11813 - “மானுட விடுதலையே எமது இலக்கு” - ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை
காலத்தை வென்று நிற்கும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள். தமிழீழ விடுதலை புலிகளின் கலை, பண்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக பணியாற்றியவர். அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற விடை தெரியாத நிலையில், டிசம்பர் 3 (1948) பிறந்த புதுவை இரத்தினதுரை அவர்கள் தனது 75 ஆவது வயதை நிறைவு செய்யும் இவ்வேளையில் அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு 2006 ஆம் ஆண்டு வழங்கிய நேர்முகத்தை மீள் பதிவு செய்கிறோம். அவரோடு உரையாடியவர் றைசெல். நேர்முகம் – பாகம் 1.
Thu, 28 Nov 2024 - 13min - 11812 - கணவனைக் கொன்று துண்டு துண்டுகளாக வெட்டி வீசிய சிட்னி பெண்? - பிந்திய விவரங்கள்
சிட்னி Greenacre பகுதியில் மனைவியால் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டதாகக் கூறப்படும் நபர், கொலை செய்யப்பட்ட அன்றையதினம் தனது சொத்துக்கள் மீதான அதிகாரத்தை மனைவிக்கு வழங்கும் power of attorneyஇல் கையொப்பமிட்டிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Thu, 28 Nov 2024 - 02min - 11811 - சாதி பாகுபாடு இனவெறி என்கிறது ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையம்!
நாட்டில் National Anti-Racism Taskforce தேசிய இனவெறி எதிர்ப்பு செயலணி ஒன்றை அமைக்குமாறு ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. நாட்டில் நிலவும் சாதியை, அதன் மூலம் கடைபிடிக்கப்படும் பாகுபாட்டை National Anti-Racism Framework குறிப்பிடுகிறது. ஆங்கில மூலம் SBS-Newsக்காக Alexandra Jones. SBS – தமிழுக்காக தயாரித்தவர்: றைசெல்.
Thu, 28 Nov 2024 - 07min - 11810 - Why did India plan to spend 1,500 Crore Rs. (A$260 million) ?? - 1500 கோடி ரூபாய் பணத்தை இந்தியா ஏன் செலவிடுகிறது?
The Government of India announced a plan at a cost of Rs 1,500 crore (260 million Australian Dollars) in 2013. Kulasegaram Sanchayan talked to Prof. G. Rajasekaran, one of the founders of this project, to find out more on the purpose of this project, what benefits this project may bring to an average taxpayer, what is a neutrino, and what the India based Neutrino Observatory is trying to achieve. - இந்திய மத்திய அரசு 1500 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டத்தை 2013ஆம் ஆண்டில் அறிவித்தது. இந்தத் திட்டத்தின் தேவை என்ன? அதனால் என்ன பலன்களை மக்கள் அடையவிருக்கிறார்கள், இந்தத் திட்டத்தால் நிறுவப்படும் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் என்ன செய்ய விழைகிறது, நியூட்ரினோ என்றால் என்ன என்பது பற்றி, அதன் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர்களில் ஒருவரான பேராசிரியர் ராஜசேகரனிடம் அப்போது கேட்டுத் தெரிந்து கொண்டார் குலசேகரம் சஞ்சயன்.
Thu, 28 Nov 2024 - 10min - 11809 - செனட் அவையில் செனட்டர்கள் Payman மற்றும் Hanson கடுமையான வாக்குவாதம்
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 28 நவம்பர் 2024 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
Thu, 28 Nov 2024 - 04min - 11808 - NSW ஓட்டுநர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த ஆண்டு random drug test - எழுந்தமானமாக போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுநர்களில் 10 பேரில் ஒருவர், positive-நேர்மறை சோதனை முடிவை காண்பித்ததாக NRMAஇன் புதிய அறிக்கை கூறுகின்றது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
Wed, 27 Nov 2024 - 02min - 11807 - வெளிநாடு செல்ல திட்டமிடுகிறீர்களா? ஆஸ்திரேலிய டொலர் எங்கே வலுவாக உள்ளது
ஆண்டின் இறுதி நெருங்கும் வேளையில் விடுமுறைக்காக வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்வது பற்றி யோசிக்கிறீர்களா? உங்கள் பயணம் ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றால், வரும் வாரங்களில் நீங்கள் எந்தெந்த நாடுகளைத் தெரிவுசெய்யலாம் என்பது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
Wed, 27 Nov 2024 - 02min - 11806 - நாம் வெளியில் செல்லும்போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?
நாம் வெளியில் செல்லும்போது எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற கேள்விக்குப் பதில் தருகிறார் விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தி. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 27 Nov 2024 - 09min - 11805 - “ஆஸ்திரேலிய தமிழ் பாட புத்தகங்களில் அதிக மாற்றம் தேவை” – கலாநிதி குலம்
நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் தமிழ் மொழி கற்றுக்கொடுக்க பயன்படுத்தப்படும் பாட நூற்களில் ஆண்டு நான்கு முதல் எட்டு வரையான தமிழ்ப் பாடநூற்களில் அடங்கியுள்ள பாடங்கள், மாணவர்களது அடையாளம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதில் ஆற்றக்கூடிய பங்கை ஆய்வு செய்து குலசிங்கம் சண்முகம் அவர்கள் Western Sydney பல்கலைக்கழகத்திடமிருந்து கலாநிதிப்பட்டம் (PhD) பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் சமூகமொழிப் பாடநூற்கள் கலாநிதி பட்டம் பெறுமளவு ஆழமாக ஆய்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். தனது ஆய்வு குறித்தும், இந்த ஆய்வு தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தவேண்டிய தாக்கங்கள் குறித்தும் கலாநிதி குலசிங்கம் சண்முகம் அவர்கள் SBS ஒலிப்பதிவு கூடத்தில் றைசெலுடன் கலந்துரையாடுகிறார்.
Wed, 27 Nov 2024 - 10min - 11804 - ஆஸ்திரேலியாவில் விசா இல்லாமல் தங்கியிருக்கும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்!
ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான உரிய விசா இல்லாமல் சட்டவிரோதமான முறையில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இங்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 27 Nov 2024 - 07min - 11803 - அதானிக்கு எதிரான அமெரிக்க பிடியாணையும், அதன் தமிழ்நாடு & இந்திய அரசியல் தாக்கமும்
அமெரிக்க நீதிமன்றம் இந்திய தொழிலதிபர் அதானிக்கு பிடியாணை பிறப்பித்திருக்கும் விவகாரம் டெல்லி முதல் தமிழ்நாடு வரை எதிரொலிக்கிறது. அந்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Wed, 27 Nov 2024 - 09min - 11802 - NSW Health எச்சரிக்கை: சிட்னியின் மேற்குப் பகுதி வெப்பநிலை 39Cஐ எட்டலாம்Wed, 27 Nov 2024 - 03min
- 11801 - பள்ளிக் குழந்தைகளையுடைய விக்டோரிய குடும்பங்களுக்கு $400 கொடுப்பனவு!
குடும்பங்கள் மீதான வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், பள்ளிக் குழந்தைகளையுடைய விக்டோரிய மாநில பெற்றோருக்கு 400 டொலர்கள் கொடுப்பனவு இந்தவாரம் முதல் வழங்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Tue, 26 Nov 2024 - 02min - 11800 - அடுத்த ஆண்டு எந்த நகரங்களில் வீட்டு விலை அதிகரிக்கும்? குறையும்?
2025இல் சிட்னி மற்றும் மெல்பனில் வீட்டு விலைகள் மேலும் குறையும் அதே நேரத்தில் பெர்த் நகரம் வலுவான அதிகரிப்பை அனுபவிக்கும் என SQM Researchஇன் Boom and Bust அறிக்கை கூறுகின்றது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Tue, 26 Nov 2024 - 02min - 11799 - லேபர் அரசின் வீட்டுவசதி தொடர்பிலான சட்ட முன்வடிவுகளுக்கு கிரீன்ஸ் கட்சி ஆதரவுTue, 26 Nov 2024 - 04min
- 11798 - பாலி-9 குழுவில் எஞ்சியுள்ளோர் விரைவில் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளனர்?
இந்தோனேசியாவில் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் பாலி 9 போதைப்பொருள் கடத்தல் குழுவைச்சேர்ந்த ஐந்து ஆஸ்திரேலியர்களும் விரைவில் ஆஸ்திரேலியா திரும்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Mon, 25 Nov 2024 - 02min - 11797 - Tamil Woman Embarks on a 40,000-Kilometer Global Voyage - உலகை சுற்றி 40,000 கிலோமீட்டர் பயணிக்கும் தமிழ்ப்பெண்
Two women officers from the Indian Navy are undertaking a remarkable eight-month journey to circumnavigate the globe, covering an astounding 40,000 kilometres at sea. - எட்டு மாதங்களில் நாற்பதாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, கடலில், உலகைச் சுற்றி பயணிக்கும் முயற்சி ஒன்றில் இந்திய கடற் படையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
Mon, 25 Nov 2024 - 14min - 11796 - இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மஹாயுதி கூட்டணி வெற்றி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் JMM தலைமையிலான இந்திய அணி வெற்றி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது மற்றும் 'ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு' என மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
Mon, 25 Nov 2024 - 09min - 11795 - இது ஆஸ்திரேலியாவில் 21 லட்சம் பேரை பாதிக்கிறது. நீங்களும் அதில் ஒருவரா?
கொலஸ்ட்ரால் விழிப்புணர்வு வாரம் கடந்த வாரம் அனுசரிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் சுமார் இருபத்தொரு லட்சம் பேரை பாதிக்கும் "அமைதியான நோய்" என்று அழைக்கப்படும் கொலஸ்ட்ரால் குறித்து விரிவாக விளக்குகிறார் மருத்துவர் நிர்மலா கிருஷாந்த் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Mon, 25 Nov 2024 - 08min - 11794 - இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த ஆஸ்திரேலிய மாணவி: சுயாதீன விசாரணை நடத்துமாறு வலியுறுத்தல்Mon, 25 Nov 2024 - 04min
- 11793 - நீங்கள் ஒய்வு பெறும்போது முதியோர் பராமரிப்பில் வரும் இந்த மாற்றங்கள் உங்களுக்கும் பொருந்தும்
முதியோர் பராமரிப்பு துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை உருவாக்கும் புதிய சட்டம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் முதியோர் பராமரிப்பு செலவுகள், சிறப்பு சேவைகள், மற்றும் புதிய திட்டங்களின் நடைமுறைப் படுத்தல் போன்ற விடயங்களில் பெரும் மாற்றங்கள் அறிமுகமாகவுள்ளன. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Mon, 25 Nov 2024 - 05min - 11792 - ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு
இந்த வாரத்தில் ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளில் தொகுப்பு. 23 நவம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
Sat, 23 Nov 2024 - 05min - 11791 - வெளிநாட்டு மாணவர் குறைப்பை அரசு கைவிடும் வாய்ப்பில்லை - நிபுணர்கள்
ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தின் கீழ், நாட்டினுள் அனுமதிக்கப்படும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு அரசு வரம்பு ஒன்றை நிர்ணயிப்பதற்கு எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுள்ள போதிலும், ஏற்கனவே இருக்கும் சட்டங்களைப் பயன்படுத்தி அரசு இதனை நடைமுறைப்படுத்தலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Fri, 22 Nov 2024 - 02min - 11790 - Centrelink பெயரால் இடம்பெறும் புதிய மோசடி தொடர்பில் எச்சரிக்கை!
ஆஸ்திரேலியர்களுக்கு Centrelink நூற்றுக்கணக்கான டொலர்களை "போனஸாக” கொடுப்பதாக வெளியாகும் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Fri, 22 Nov 2024 - 02min - 11789 - Has your sleep been affected since migrating to Australia? You’re not alone - புலம்பெயர்வதால் ஏற்படக்கூடிய தூக்க பிரச்சனைகளை கையாள்வது எப்படி?
Many people experience sleep disturbances due to stressors in their lives, including challenges associated with the migration experience. Issues such as insomnia and nightmares can affect both adults and children. Learn how to assess sleep quality, identify unhealthy sleep patterns, and determine when to seek help for yourself or a loved one. - ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு அவர்களது தூக்கம் தொடர்பில் சில சிக்கல்கள் எழுவது பொதுவானது. ஆனால் இது குறுகிய காலத்தில் சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்படும் அதேநேரம் இது இயல்பானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் தூக்கமின்மை ஒரு நாள்பட்ட மருத்துவப் பிரச்சினையாக மாறினால் உதவிபெறுவது அவசியமாகும்.
Fri, 22 Nov 2024 - 09min - 11788 - உங்கள் ஈரலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கான உதவிக் குறிப்புகள்!
நம்மில் பலருக்கும் ஏற்படக்கூடிய நோய்நிலைமைகளில் ஒன்று Fatty liver disease. இது எதனால் ஏற்படுகிறது மற்றும் இதற்குத் தீர்வு என்ன என்பது உள்ளிட்ட விடயங்களை விளக்குகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் - Gastroenterologist குமணன் நலங்கிள்ளி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Fri, 22 Nov 2024 - 16min - 11787 - இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
இலங்கை புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் கன்னி அமர்வில் அதிபர் அனுரகுமார உரை நிகழ்த்தினார்; மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும், குழந்தையும் மரணம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Fri, 22 Nov 2024 - 08min - 11786 - போர்க்குற்றங்கள் செய்ததாக கூறி இஸ்ரேலின் பிரதமரைக் கைது செய்ய ஆணைFri, 22 Nov 2024 - 04min
- 11785 - லாவோஸில் நஞ்சூட்டிய பானம் அருந்திய மெல்பன் மாணவிகளில் ஒருவர் மரணம்
Laos இற்கு சுற்றுலா சென்ற மெல்பன் மாணவிகள் மெதனோல் கலந்த பானத்தை உண்டதனால் ஆபத்தான நிலையில் தாய்லாந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Melbourne teen Bianca Jones dies in hospital after suspected methanol poisoning in Laos. Melbourne teen Bianca Jones has died in a Thai hospital, a week after a suspected methanol poisoning incident in neighbouring Laos that affected her and her best friend.
Thu, 21 Nov 2024 - 06min - 11784 - சிட்னி ரயில் வலையமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!
சிட்னியின் ரயில் வலையமைப்பு மேற்கொள்ளவிருந்த பாரிய வேலைநிறுத்த நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Thu, 21 Nov 2024 - 02min - 11783 - 'புகலிடக்கோரிக்கையாளர்கள் உட்பட நாடுகடத்தலை எதிர்கொள்பவர்களைப் பாதிக்கவுள்ள அரசின் சட்டத்திருத்தம்'
Albanese அரசின் குடிவரவு தொடர்பான சட்டமுன்வடிவு, ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லாதவர்களை நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கு வழிசெய்யும் என மனித உரிமைகள் குழு எச்சரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Thu, 21 Nov 2024 - 03min - 11782 - சர்வதேச ஆண்கள் தினம் அவசியம்தானா ?
ஆண்களுக்கும் மதிப்புக் கொடுத்து அவர்களுக்குத் தனித்துவமான விடயங்களுக்கான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் ஒரு நாள், சர்வதேச ஆண்கள் தினம். இது குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Thu, 21 Nov 2024 - 09min - 11781 - பணத்தாள்களைப் பயன்படுத்துகிறீர்களா?
நீங்கள் கடைசியாக பணத்தாள்களைப் பயன்படுத்தினீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் பணத்தாள்களைப் பயன்படுத்தி இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். ஆனால், நாட்டிலுள்ள வணிக நிறுவனங்கள் பணத்தாள்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
Thu, 21 Nov 2024 - 06min - 11780 - Bunnings நிறுவனம் தனியுரிமைச் சட்டங்களை மீறியது - தனியுரிமை ஆணையர்
வாடிக்கையாளர்களின் அங்கீகாரத்தைப் பெறாமல், அவர்களது முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை Bunnings நிறுவனம் பயன்படுத்தியதன் மூலம் தனியுரிமைச் சட்டங்களை மீறியது என்று Privacy Commissioner - தனியுரிமை ஆணையர் கண்டுபிடித்துள்ளார்.
Thu, 21 Nov 2024 - 08min - 11779 - காஸாவில் போர் நிறுத்தத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்குThu, 21 Nov 2024 - 04min
- 11778 - ஊதியம் இல்லாத overtime: ஆண்டுக்கு 91 பில்லியன் டொலர்களை இழக்கும் ஆஸ்திரேலியர்கள்!
ஆஸ்திரேலிய பணியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 91 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய overtime-கூடுதல் வேலையை அதற்குரிய வருவாயைப் பெறாமல் செய்து வருகின்றனர் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 20 Nov 2024 - 02min - 11777 - “முதுமை பருவத்தில் சன்னியாசம் போவது தமிழ் பண்பாடாகவே இருந்துள்ளது”
தமிழ் சமூகத்தில் புத்த சமயத்தை பின்பற்றுகின்றவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற பின்னணியில், தமிழ் சமூகத்தை சார்ந்த புத்த மதகுரு ஒருவரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சந்தித்தது ஆச்சரியமாக இருந்தது. அவரோடு உரையாடியது வித்தியாசமான அனுபவத்தை தந்தது. பிரசாந்த் என்று முதலில் அழைக்கப்பட்ட அவர் இப்போது பந்தே சத்தவிகாரி என்று புத்த துறவியாக அறியப்படுகிறார். அவரை அவரது புத்த மடத்தில் அண்ணாமலை மகிழ்நன் அவர்களுடன் சந்தித்து றைசெல் நீண்ட நேரம் உரையாடினார். அவர் வழங்கிய நேர்முகத்தின் மூன்றாம் (நிறைவு) பாகம்.
Wed, 20 Nov 2024 - 13min - 11776 - “புத்த துறவியாக மாறும் முன்பே நான் மதத்தையும், சாதியையும் கடந்து வாழ்ந்தவன்”
தமிழ் சமூகத்தில் புத்த சமயத்தை பின்பற்றுகின்றவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற பின்னணியில், தமிழ் சமூகத்தை சார்ந்த புத்த மதகுரு ஒருவரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சந்தித்தது ஆச்சரியமாக இருந்தது. அவரோடு உரையாடியது வித்தியாசமான அனுபவத்தை தந்தது. பிரசாந்த் என்று முதலில் அழைக்கப்பட்ட அவர் இப்போது பந்தே சத்தவிகாரி என்று புத்த துறவியாக அறியப்படுகிறார். அவரை அவரது புத்த மடத்தில் அண்ணாமலை மகிழ்நன் அவர்களுடன் சந்தித்து றைசெல் நீண்ட நேரம் உரையாடினார். அவர் வழங்கிய நேர்முகத்தின் இரண்டாம் பாகம்.
Wed, 20 Nov 2024 - 16min - 11775 - சிட்னியில் ஆயிரக்கணக்கில் தமிழ் குழந்தைகள் கலந்துகொண்ட விழா!
NSW மாநிலத்தில் இயங்கும் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகம் (Balar Malar Tamil Educational Association) தனது 47 ஆவது ஆண்டு தினத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் விமர்சையாக கொண்டாடியது. Blacktown Leisure Centre, Stanhope Gardens எனும் இடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தமிழ் மழலைகள், சிறுவர்கள், இளைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ தொணடர்கள் என்று பலரும் கலந்துகொண்ட இந்த விழாவில் SBS தமிழ் ஒலிபரப்பு ஊடக அனுசரணை வழங்கி கலந்துகொண்டது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல்.
Wed, 20 Nov 2024 - 12min - 11774 - விக்டோரியாவிலுள்ள phone-detection கமராக்களில் நாளொன்றுக்கு 300 பேர் அகப்படுகின்றனர்!
விக்டோரியா மாநிலத்தில் ஒன்பது phone and seatbelt detection கமராக்கள் முழுமையாகச் செயல்பட ஆரம்பித்த முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 83,400 அபராத கடிதங்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 20 Nov 2024 - 02min - 11773 - இந்திய பேசுபொருள்: தமிழர்கள் வாழும் மும்பை ‘தாராவி’
மும்பையில் தமிழர்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் வாழும் பகுதியாக அறியப்படும் தாராவி மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முக்கிய பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Wed, 20 Nov 2024 - 10min - 11772 - Understanding Domestic Violence: insights and interventions - குடும்ப வன்முறை: சில விளக்கமும், முன்னெடுப்பும்
It is emphasised that understanding domestic violence is crucial for everyone in the country. Against this backdrop, the Women in Health Network (WiHN), in collaboration with the Zen Tea Lounge Foundation, is organising an awareness session titled "Empowering Families to Find Safety Amid Violence." Krithika Muruganantham from the Women in Health Network (WiHN) will discuss domestic violence and provide insights into this initiative. Interviewer: RaySel. - நாட்டில் குடும்ப வன்முறை தொடர்பான புரிதல் அனைவருக்கும் தேவை என்று வலியுறுத்தப்படுகிறது. இந்த பின்னணில் Women in Health Network (WiHN) எனும் அமைப்பு Zen Tea Lounge Foundationயுடன் இணைந்து “Empowering - Families in violence find safety எனும் தலைப்பில் விழிப்புணர்வு அமர்வை நடத்துகிறது. இந்த நிகழ்வு NSW மாநிலத்தின் Smithfield, 15/108 எனும் இலக்கத்திலுள்ள Zen Tea Lounge Foundation எனும் இடத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு குறித்தும், குடும்ப வன்முறை குறித்தும் விளக்குகிறார் Women in Health Network (WiHN) எனும் அமைப்பின் கிருத்திகா முருகானந்தம் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Wed, 20 Nov 2024 - 10min - 11771 - வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் கைவிடப்படுமா?
நாட்டினுள் அனுமதிக்கப்படும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்கட்சி கூட்டணியும் கிரீன்ஸ் கட்சியும் தற்போது முட்டுக்கட்டை போட்டுள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
Wed, 20 Nov 2024 - 07min - 11770 - சிட்னி ரயில்வே வலையமைப்பு நான்கு நாட்கள் நிறுத்தப்பட வாய்ப்புWed, 20 Nov 2024 - 03min
- 11769 - பிரிஸ்பேனில் கணவனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்தியப்பெண்- பிந்திய தகவல்கள்
பிரிஸ்பேன் லோகனில் கணவனால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இந்தியப் பெண், தான் கொலை செய்யப்பட்டால் அதற்குத் தனது கணவன்தான் பொறுப்பு என்பதாக வீடியோ ஒன்றை முன்கூட்டியே பதிவுசெய்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வழக்கின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Tue, 19 Nov 2024 - 03min - 11768 - மெல்பனில் அயல்வீட்டு நபரால் குத்திக் கொல்லப்பட்ட பெண்- நடந்தது என்ன?
மெல்பனில் 51 வயது தாய் ஒருவர் அயல் வீட்டு நபரால் குத்திக் கொலைசெய்யப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் குறித்த பிந்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Tue, 19 Nov 2024 - 02min - 11767 - சீனா- ஆஸ்திரேலியா வர்த்தக உறவுகள் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு!Tue, 19 Nov 2024 - 03min
- 11766 - இலங்கையில் இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இருமடங்கு பெறுவார்களா?
இலங்கையில் அதிபராக பதவி ஏற்ற இடதுசாரி அரசியல் பேசும் அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை எதிர்கொள்ளும் பின்னணியில், இடதுசாரிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இருமடங்கு இடங்களை கைப்பற்றுவார்களா என்ற கேள்விக்கு பதில் தருகிறார் புதிய ஜனநாயக கட்சி (மா.லெ) எனும் இடதுசாரி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சிவ.இராஜேந்திரன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Tue, 19 Nov 2024 - 13min - 11765 - பப்புவா நியூ கினியில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் தற்போதைய நிலை!
பப்புவா நியூ கினியில் உள்ள பல புகலிடக் கோரிக்கையாளர்கள் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாழ்வதற்காக போராடி வருகின்றனர் என அகதிகள் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Mon, 18 Nov 2024 - 02min - 11764 - Finding a bank account that works hard for you - உங்களுக்குப் பொருத்தமான வங்கிக் கணக்கை தேர்ந்தெடுப்பது எப்படி?
If you have a job, receive government benefits or want to pay your bills easily you’ll need a bank account. You may even need more than one. To join the 20 million customers who hold Australian bank accounts, take some time to find one that best suits your needs. - உங்களுக்கு ஒரு வேலை ஊடாக சம்பளம் வருகிறதென்றால், அரச சலுகைகளைப் பெறுகிறீர்கள் என்றால் அல்லது உங்கள் billகளை எளிதாகச் செலுத்த விரும்பினால், உங்களுக்கு ஒரு வங்கிக் கணக்கு தேவைப்படும். சிலவேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் கூட தேவைப்படலாம்.
Mon, 18 Nov 2024 - 09min - 11763 - Tamil Heritage Week to be Celebrated in Australia! - ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன்முதலாக நகரசபையொன்று தமிழர் பாரம்பரிய வாரம் கொண்டாடப்போகிறது!
The Cumberland City Council has officially designated January 13th through 19th, 2025, as Tamil Heritage Week. - Cumberland City Council என்ற உள்ளூராட்சி சபை, அடுத்த வருடம், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி உள்ளிட்ட வாரத்தை" தமிழர் மரபுரிமை வாரம்” (Tamil Heritage Week) என அறிவித்துள்ளது.
Mon, 18 Nov 2024 - 08min - 11762 - இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் கலவரம், நடிகர் விஜயின் தவெக கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் இடையே மோதல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
Mon, 18 Nov 2024 - 09min - 11761 - பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு: ஆஸ்திரேலியாவின் மூத்த ஒலிபரப்பாளர் Alan Jones கைதுMon, 18 Nov 2024 - 04min
- 11760 - Ticketless parking fines நடைமுறை NSW மாநிலத்தில் மாற்றப்படுகிறது
Ticketless parking fines நடைமுறை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மாற்றப்படுகிறது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Sun, 17 Nov 2024 - 02min - 11759 - இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் வரலாற்று வெற்றிக்கு காரணம் என்ன?
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான “தேசிய மக்கள் சக்தி” கட்சி, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் என்ன என்பது தொடர்பாக “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Sun, 17 Nov 2024 - 10min - 11758 - நமக்கு கிடைக்கும் குழாய் நீர் குடிக்க உகந்ததுதானா?
ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் குழாய்நீர் குடிப்பதற்கு உகந்தது, பாதுகாப்பானது என்றே சொல்லப்பட்டுவந்தது. ஆனால் சமீபகாலமாக, குழாய் நீர் பாதுகாப்பானது இல்லை; அதில் நமக்கு தீங்குவிளைவிக்கும் வேதியல் பொருட்கள் இருக்கின்றன என்று பலரும் குறிப்பாக நிபுணர்கள், விஞ்ஞானிகள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்று விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Sat, 16 Nov 2024 - 11min - 11757 - ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு
இந்த வாரத்தில் ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளில் தொகுப்பு. 16 நவம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
Sat, 16 Nov 2024 - 05min - 11756 - நிதி பற்றிய தேர்தல் சட்ட மாற்றங்கள் 'பெரிய கட்சிகளின் சதி' என விமர்சனம்
வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் செலவிடப்படும் தொகை போன்றவற்றுக்கு வரம்பு விதிக்க வேண்டும் என்ற சட்ட முன்மொழிவானது அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஆண்டு இறுதி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன்மொழியப்படவுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை விளக்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். The proposed legislation, which will come before parliament in its last sitting week of the year next week, proposes to cap donations to candidates and money spent on federal election campaigns.The proposed legislation, which will come before parliament in its last sitting week of the year next week, proposes to cap donations to candidates and money spent on federal election campaigns.
Sat, 16 Nov 2024 - 06min - 11755 - நன்நடத்தை இல்லாமையினால் விசாக்கள் ரத்துச்செய்யப்படுவது பத்து மடங்காக அதிகரிப்பு!
Character-நன்நடத்தை அடிப்படையில் அகதிகள் உட்பட ஆஸ்திரேலிய குடியுரிமை அல்லாதவர்களின் விசாக்கள் ரத்துச்செய்யப்படுவது அதிகரித்துள்ளதால் குடிவரவுத் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Fri, 15 Nov 2024 - 02min - 11754 - 24 வருட சேவையைக் கொண்டாடுகிறது ஆஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம்
ஆஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம்(AMAF) 24 ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் திட்டங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அமைப்பின் வரலாறு மற்றும் அதன் தாக்கம் நிறைந்த பணிகள் குறித்தும் AMAF இன் சிட்னியை தளமாகக் கொண்ட நிர்வாக உறுப்பினரான Dr மனோமோகன் குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார்.
Fri, 15 Nov 2024 - 16min - 11753 - ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்ற நீதிபதி குற்றவாளியானது எப்படி?
டஸ்மேனிய மாநில உச்ச நீதிமன்ற நீதிபதி கிரிகோரி கீசன் (Gregory Geason), ஒரு பெண்ணைத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். சிறைத் தண்டனைக்குப் பதிலாக 100 மணி நேரம் சமூக சேவை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளார். இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Fri, 15 Nov 2024 - 08min - 11752 - அமெரிக்காவின் மேலதிக வர்த்தக கட்டண அச்சுறுத்தலுக்கு நாம் தயாரா?Fri, 15 Nov 2024 - 04min
- 11751 - இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: தேசிய மக்கள் சக்தி முன்னிலை
நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டுள்ளன. அதிபர் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் உள்ளது. இதுதொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Fri, 15 Nov 2024 - 08min - 11750 - COP 29 காலநிலை மாநாடு: வரலாறு, முக்கியத்துவம், சவால்கள்
ஐக்கிய நாட்டு சபையின் COP 29 எனும் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு அசர்பெய்ஜான் நாட்டில் நடந்துகொண்டுள்ளது. இமம் மாநாடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெறலாம் என்ற பின்னணியில், இந்த மாநாடு குறித்த வரலாற்றுப் பின்னணி, முக்கியத்துவம், சவால்கள் குறித்த விளக்கத்தை “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் றைசெல்.
Thu, 14 Nov 2024 - 09min - 11749 - இது ஆஸ்திரேலிய நவீன வரலாற்றின் மிக இருண்ட பக்கங்களில் ஒன்று!
பெர்த் கடற்கரையில் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கும் ரோட்னெஸ்ட் தீவு சொல்லும் வரலாறு ஆஸ்திரேலிய நவீன வரலாற்றின் மிக இருண்ட பக்கங்களில் ஒன்று. அந்த துன்பத்தையும், கொடூரத்தையும் விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Kearyn Cox & Sam Dover. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
Thu, 14 Nov 2024 - 05min - 11748 - Country-led design in Australian cities: what is it and why does it matter? - ஆஸ்திரேலிய கட்டடக்கலையில் பூர்வீகக் குடிமக்களின் பங்களிப்பு
Country is the term at the heart of Australian Indigenous heritage and continuing practices. The environments we are part of, carry history spanning tens of thousands of years of First Nations presence, culture, language, and connection to all living beings. So, how should architects, government bodies and creative practitioners interact with Indigenous knowledge when designing our urban surroundings? - ஆஸ்திரேலியாவில் கட்டிடங்கள் மற்றும் கலை வடிவமைப்புகளை உருவாக்குவதில் பூர்வீகக்குடியின சமூகங்களின் வரலாறு மற்றும் கலாச்சார அறிவை இணைப்பதற்கு தற்போது அதிகமாக கவனம் செலுத்தப்படுகிறது. இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Thu, 14 Nov 2024 - 09min - 11747 - How a Tamil Refugee Became a Medical Researcher - அகதியாக வந்தவர் மருத்துவ ஆராய்ச்சியாளரான கதை
Researchers at The Children's Hospital at Westmead say they've discovered babies who die from Sudden Infant Death Syndrome (SIDS) have greatly decreased levels of a certain brain protein, known as Orexin, responsible for regulating sleep arousal. - சடுதியாகக் குழந்தைகள் இறப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடித்திருக்கிறார்கள், வெஸ்ட்மீட் குழந்தைகள் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். SIDS என்று விவரிக்கப்படும், குழந்தைகள் சடுதியாக இறப்பது குறித்த ஆராய்ச்சியில் ஒரு தமிழரும் ஈடுபட்டுள்ளார். அருண்யா விவேகானந்தராஜா, தனது ஆராய்ச்சி குறித்தும் பெற்றோர் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.
Thu, 14 Nov 2024 - 10min - 11746 - அமெரிக்க அதிபரும், அதிபராக போகின்றவரும் சந்தித்தனர்
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 14 நவம்பர் 2024 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
Thu, 14 Nov 2024 - 04min - 11745 - சிட்னியில் அகதிகள் மேற்கொண்ட போராட்டம் 100 நாட்களை எட்டியது!
ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் சிட்னியில் நடைபெற்றுவரும் போராட்டம் இன்று நவம்பர் 13 புதன்கிழமையுடன் 100 நாட்களை எட்டியுள்ளது. இது தொடர்பில் சுபாஸ் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
Wed, 13 Nov 2024 - 13min - 11744 - “தறுதலைகளும், போக்கத்தவர்களுமே சாதியை பிடித்து தொங்கிகொண்டுள்ளார்கள்” – VKT பாலன்
தமிழ்நாட்டில் நூறு கோடி ரூபாய் மதிப்புகொண்ட சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வந்தவர் VKT பாலன் அவர்கள். அவர் கடந்த திங்கள் (11 நவம்பர்) காலமானார். அவருக்கு வயது 70. மிகவும் எளிய பின்னணியிலிருந்து உச்சம் தொட்டவர் பாலன் அவர்கள். SBS தமிழ் ஒலிபரப்புக்காக நான் அவரை 2012 ஆம் ஆண்டு தொலைபேசி வழி நேர்முகம் கண்டேன். அவரின் கதையையும், கருத்தையும் முன்வைக்கும் நேர்முகத்தின் ஒருபகுதி. நிகழ்ச்சியாக்கம் – றைசெல். இது ஒரு மறு ஒலிபரப்பு.
Wed, 13 Nov 2024 - 18min - 11743 - விக்டோரியா முன்பள்ளி விபத்து: குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு தன் உயிரை இழந்த பெண்
விக்டோரியாவில் Montessori முன்பள்ளி ஒன்றில் இடம்பெற்ற விபத்தின்போது, குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றிவிட்டு தனது உயிரை இழந்த பெண் ஒருவரை முழு நாடுமே போற்றிக்கொண்டாடுகிறது. இந்தச் செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 13 Nov 2024 - 06min - 11742 - விடிந்தால் இலங்கையில் தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன?
இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்துள்ளது. நாளை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் என்று தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. நாளை தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்ற தலைப்பில் கருத்துப்பகிர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Wed, 13 Nov 2024 - 08min - 11741 - Migrants aren't being hired in the jobs they're qualified for. It's costing Australia billions - SBS Examines : புலம்பெயர்ந்தோர் தகுதியான வேலைகளில் பணியமர்த்தப்படாததால் பல கோடி இழப்பு
Australia is facing a skills shortage. So why are migrants struggling to find work in line with their education and experience? - ஆஸ்திரேலியா திறன் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. புலம்பெயர்ந்தோர் தங்களுக்குத் தகுதியான வேலையைக் கண்டுபிடிக்க ஏன் போராடுகிறார்கள்?
Wed, 13 Nov 2024 - 05min - 11740 - தமிழக பேசுபொருள்: “நாம் தமிழர்” கட்சியில் கலகம் & மீனவர் போராட்டம்
தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்துவரும் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து பலர் வெளியேறுகின்றனர்; தொடரும் மீனவர்கள் போராட்டம் எனும் செய்திகளின் பின்னணிகளை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Wed, 13 Nov 2024 - 09min - 11739 - NSWஇல் ஊதிய உயர்வு கோரி தாதியர்கள் 24மணிநேர வேலைநிறுத்தம்Wed, 13 Nov 2024 - 03min
- 11738 - ஆஸ்திரேலியாவை வந்தடைந்த மற்றுமொரு படகு? தகவல்களை வெளியிட மறுக்கும் அரசு!
NTயின் Croker தீவில் நான்கு வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அவர்கள் புறப்பட்ட நாட்டிற்கு, அல்லது அவர்களது தாய்நாட்டிற்கு அல்லது நவுருவில் உள்ள பிராந்திய செயலாக்க மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்களா என்ற தகவல்களை ஆஸ்திரேலிய அரசு வெளியிடவில்லை.இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 13 Nov 2024 - 02min - 11737 - உலக வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவாகவுள்ளது- WMOTue, 12 Nov 2024 - 04min
- 11735 - Veteran Tamil actor Delhi Ganesh leaves a vacuum - டெல்லி கணேஷ்: சாதா கணேஷ் அல்ல.... வெற்றிடத்தை விட்டுச் செல்லும் கணேஷ்
Veteran Tamil actor Delhi Ganesh died on Saturday night, following health complications. He was 80. Kulasegaram Sanchayan presents a memoir about Delhi Ganesh with the views of Mr Mohan Raman, fellow actor, friend, and one who is proud to call Delhi Ganesh a sibling. - நேற்று முன்தினம் காலமான தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான டெல்லி கணேஷ் அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை, டெல்லி கணேஷ் அவர்களை சகோதரர் என்று வர்ணிக்கும் மூத்த நடிகர் மோகன் ராமன் அவர்களது கருத்துகளோடு முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Mon, 11 Nov 2024 - 10min - 11734 - இளையோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை வருகிறது!
குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான முதல் நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. இதன் பின்னணியிலுள்ள செய்திகளைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Mon, 11 Nov 2024 - 07min - 11733 - இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசியல் கட்சிகள் போராட்டம், ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் களம், திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றா, இல்லையா என்பது குறித்த சீமான் மற்றும் விஜய் இடையே மோதல் மற்றும் தெலுங்கர்கள் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Mon, 11 Nov 2024 - 09min
Podcasts semelhantes a SBS Tamil - SBS தமிழ்
- Kriminálka Český rozhlas
- El Partidazo de COPE COPE
- Herrera en COPE COPE
- Es la Mañana de Federico esRadio
- La Noche de Dieter esRadio
- Hondelatte Raconte - Christophe Hondelatte Europe 1
- Affaires sensibles France Inter
- La rosa de los vientos OndaCero
- Más de uno OndaCero
- La Zanzara Radio 24
- Espacio en blanco Radio Nacional
- L'Heure Du Crime RTL
- El Larguero SER Podcast
- Nadie Sabe Nada SER Podcast
- SER Historia SER Podcast
- Todo Concostrina SER Podcast
- 安住紳一郎の日曜天国 TBS RADIO
- 辛坊治郎 ズーム そこまで言うか! ニッポン放送
- 飯田浩司のOK! Cozy up! Podcast ニッポン放送
- 武田鉄矢・今朝の三枚おろし 文化放送PodcastQR
Outros Podcasts de Notícias e Política
- The Ray Hadley Morning Show 2GB
- Ben Fordham Live on 2GB Breakfast Radio 2GB
- The Bolt Report Sky News Australia / NZ
- Credlin Sky News Australia / NZ
- Tình Yêu - Hôn Nhân Báo Phụ Nữ
- Global News Podcast BBC World Service
- Paul Murray Live Sky News Australia / NZ
- You Cannot Be Serious Sam Newman
- The Megyn Kelly Show SiriusXM
- Nights with John Stanley 2GB & 4BC
- Dateline NBC NBC News
- The Tucker Carlson Show Tucker Carlson Network
- The Dan Bongino Show Cumulus Podcast Network | Dan Bongino
- Ukraine: The Latest The Telegraph
- Les Grosses Têtes RTL
- UFO WARNING UFO WARNING
- Sky Sports Radio's Big Sports Breakfast Sky Sports Radio
- The Last Word with Lawrence O’Donnell Lawrence O'Donnell, MSNBC
- Australia Overnight with Clinton Maynard 2GB
- Bannon`s War Room WarRoom.org
Podcasts de SBS Arabic24
- SBS Vietnamese - SBS Việt ngữ SBS
- SBS Cantonese - SBS廣東話節目 SBS
- SBS Mandarin - SBS 普通话电台 SBS
- SBS Japanese - SBSの日本語放送 SBS
- SBS Lao - SBS ພາສາລາວ SBS
- SBS Bulgarian - SBS на Български SBS
- SBS Nepali - एसबीएस नेपाली पोडकास्ट SBS
- SBS Hindi SBS
- SBS Bangla - এসবিএস বাংলা SBS
- SBS Malayalam - എസ് ബി എസ് മലയാളം പോഡ്കാസ്റ്റ് SBS
- SBS Tigrinya - ኤስ.ቢ.ኤስ ትግርኛ SBS