Podcasts by Category
- 11750 - COP 29 காலநிலை மாநாடு: வரலாறு, முக்கியத்துவம், சவால்கள்
ஐக்கிய நாட்டு சபையின் COP 29 எனும் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு அசர்பெய்ஜான் நாட்டில் நடந்துகொண்டுள்ளது. இமம் மாநாடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெறலாம் என்ற பின்னணியில், இந்த மாநாடு குறித்த வரலாற்றுப் பின்னணி, முக்கியத்துவம், சவால்கள் குறித்த விளக்கத்தை “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் றைசெல்.
Thu, 14 Nov 2024 - 09min - 11749 - இது ஆஸ்திரேலிய நவீன வரலாற்றின் மிக இருண்ட பக்கங்களில் ஒன்று!
பெர்த் கடற்கரையில் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கும் ரோட்னெஸ்ட் தீவு சொல்லும் வரலாறு ஆஸ்திரேலிய நவீன வரலாற்றின் மிக இருண்ட பக்கங்களில் ஒன்று. அந்த துன்பத்தையும், கொடூரத்தையும் விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Kearyn Cox & Sam Dover. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
Thu, 14 Nov 2024 - 05min - 11748 - Country-led design in Australian cities: what is it and why does it matter? - ஆஸ்திரேலிய கட்டடக்கலையில் பூர்வீகக் குடிமக்களின் பங்களிப்பு
Country is the term at the heart of Australian Indigenous heritage and continuing practices. The environments we are part of, carry history spanning tens of thousands of years of First Nations presence, culture, language, and connection to all living beings. So, how should architects, government bodies and creative practitioners interact with Indigenous knowledge when designing our urban surroundings? - ஆஸ்திரேலியாவில் கட்டிடங்கள் மற்றும் கலை வடிவமைப்புகளை உருவாக்குவதில் பூர்வீகக்குடியின சமூகங்களின் வரலாறு மற்றும் கலாச்சார அறிவை இணைப்பதற்கு தற்போது அதிகமாக கவனம் செலுத்தப்படுகிறது. இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Thu, 14 Nov 2024 - 09min - 11747 - How a Tamil Refugee Became a Medical Researcher - அகதியாக வந்தவர் மருத்துவ ஆராய்ச்சியாளரான கதை
Researchers at The Children's Hospital at Westmead say they've discovered babies who die from Sudden Infant Death Syndrome (SIDS) have greatly decreased levels of a certain brain protein, known as Orexin, responsible for regulating sleep arousal. - சடுதியாகக் குழந்தைகள் இறப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடித்திருக்கிறார்கள், வெஸ்ட்மீட் குழந்தைகள் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். SIDS என்று விவரிக்கப்படும், குழந்தைகள் சடுதியாக இறப்பது குறித்த ஆராய்ச்சியில் ஒரு தமிழரும் ஈடுபட்டுள்ளார். அருண்யா விவேகானந்தராஜா, தனது ஆராய்ச்சி குறித்தும் பெற்றோர் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.
Thu, 14 Nov 2024 - 10min - 11746 - அமெரிக்க அதிபரும், அதிபராக போகின்றவரும் சந்தித்தனர்
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 14 நவம்பர் 2024 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
Thu, 14 Nov 2024 - 04min - 11745 - சிட்னியில் அகதிகள் மேற்கொண்ட போராட்டம் 100 நாட்களை எட்டியது!
ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் சிட்னியில் நடைபெற்றுவரும் போராட்டம் இன்று நவம்பர் 13 புதன்கிழமையுடன் 100 நாட்களை எட்டியுள்ளது. இது தொடர்பில் சுபாஸ் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
Wed, 13 Nov 2024 - 13min - 11744 - “தறுதலைகளும், போக்கத்தவர்களுமே சாதியை பிடித்து தொங்கிகொண்டுள்ளார்கள்” – VKT பாலன்
தமிழ்நாட்டில் நூறு கோடி ரூபாய் மதிப்புகொண்ட சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வந்தவர் VKT பாலன் அவர்கள். அவர் கடந்த திங்கள் (11 நவம்பர்) காலமானார். அவருக்கு வயது 70. மிகவும் எளிய பின்னணியிலிருந்து உச்சம் தொட்டவர் பாலன் அவர்கள். SBS தமிழ் ஒலிபரப்புக்காக நான் அவரை 2012 ஆம் ஆண்டு தொலைபேசி வழி நேர்முகம் கண்டேன். அவரின் கதையையும், கருத்தையும் முன்வைக்கும் நேர்முகத்தின் ஒருபகுதி. நிகழ்ச்சியாக்கம் – றைசெல். இது ஒரு மறு ஒலிபரப்பு.
Wed, 13 Nov 2024 - 18min - 11743 - விக்டோரியா முன்பள்ளி விபத்து: குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு தன் உயிரை இழந்த பெண்
விக்டோரியாவில் Montessori முன்பள்ளி ஒன்றில் இடம்பெற்ற விபத்தின்போது, குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றிவிட்டு தனது உயிரை இழந்த பெண் ஒருவரை முழு நாடுமே போற்றிக்கொண்டாடுகிறது. இந்தச் செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 13 Nov 2024 - 06min - 11742 - விடிந்தால் இலங்கையில் தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன?
இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்துள்ளது. நாளை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் என்று தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. நாளை தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்ற தலைப்பில் கருத்துப்பகிர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Wed, 13 Nov 2024 - 08min - 11741 - Migrants aren't being hired in the jobs they're qualified for. It's costing Australia billions - SBS Examines : புலம்பெயர்ந்தோர் தகுதியான வேலைகளில் பணியமர்த்தப்படாததால் பல கோடி இழப்பு
Australia is facing a skills shortage. So why are migrants struggling to find work in line with their education and experience? - ஆஸ்திரேலியா திறன் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. புலம்பெயர்ந்தோர் தங்களுக்குத் தகுதியான வேலையைக் கண்டுபிடிக்க ஏன் போராடுகிறார்கள்?
Wed, 13 Nov 2024 - 05min - 11740 - தமிழக பேசுபொருள்: “நாம் தமிழர்” கட்சியில் கலகம் & மீனவர் போராட்டம்
தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்துவரும் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து பலர் வெளியேறுகின்றனர்; தொடரும் மீனவர்கள் போராட்டம் எனும் செய்திகளின் பின்னணிகளை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Wed, 13 Nov 2024 - 09min - 11739 - NSWஇல் ஊதிய உயர்வு கோரி தாதியர்கள் 24மணிநேர வேலைநிறுத்தம்Wed, 13 Nov 2024 - 03min
- 11738 - ஆஸ்திரேலியாவை வந்தடைந்த மற்றுமொரு படகு? தகவல்களை வெளியிட மறுக்கும் அரசு!
NTயின் Croker தீவில் நான்கு வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அவர்கள் புறப்பட்ட நாட்டிற்கு, அல்லது அவர்களது தாய்நாட்டிற்கு அல்லது நவுருவில் உள்ள பிராந்திய செயலாக்க மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்களா என்ற தகவல்களை ஆஸ்திரேலிய அரசு வெளியிடவில்லை.இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 13 Nov 2024 - 02min - 11737 - உலக வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவாகவுள்ளது- WMOTue, 12 Nov 2024 - 04min
- 11735 - Veteran Tamil actor Delhi Ganesh leaves a vacuum - டெல்லி கணேஷ்: சாதா கணேஷ் அல்ல.... வெற்றிடத்தை விட்டுச் செல்லும் கணேஷ்
Veteran Tamil actor Delhi Ganesh died on Saturday night, following health complications. He was 80. Kulasegaram Sanchayan presents a memoir about Delhi Ganesh with the views of Mr Mohan Raman, fellow actor, friend, and one who is proud to call Delhi Ganesh a sibling. - நேற்று முன்தினம் காலமான தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான டெல்லி கணேஷ் அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை, டெல்லி கணேஷ் அவர்களை சகோதரர் என்று வர்ணிக்கும் மூத்த நடிகர் மோகன் ராமன் அவர்களது கருத்துகளோடு முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Mon, 11 Nov 2024 - 10min - 11734 - இளையோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை வருகிறது!
குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான முதல் நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. இதன் பின்னணியிலுள்ள செய்திகளைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Mon, 11 Nov 2024 - 07min - 11733 - இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசியல் கட்சிகள் போராட்டம், ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் களம், திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றா, இல்லையா என்பது குறித்த சீமான் மற்றும் விஜய் இடையே மோதல் மற்றும் தெலுங்கர்கள் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Mon, 11 Nov 2024 - 09min - 11732 - அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் COP 29 காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் தாக்கம் செலுத்துமா?Mon, 11 Nov 2024 - 04min
- 11731 - போலி சான்றிதழ்களை வழங்கிய ஆஸ்திரேலிய கல்வி நிறுவனம்! சிக்கலில் மாணவர்கள்
Australia Education & Career Collegeயில் போலி டிப்ளோமாக்கள் பெற்றதாகக் கூறப்படும் "மாணவர்களின்" தகுதிகளை ரத்து செய்யும் நடவடிக்கைகளில் Australian Skills Quality Authority (ASQA) இறங்கியுள்ளது.இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Sun, 10 Nov 2024 - 02min - 11730 - இந்த வார முக்கிய செய்திகள்Sat, 09 Nov 2024 - 05min
- 11729 - SBS Examines: In Conversation with the Governor-General - SBS Examines: கவர்னர் ஜெனரலுடன் ஒரு உரையாடல்
Australia's Governor-General is hopeful about Australia's future, despite conflict and difficulty dominating headlines. - மோதல்கள் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துவதாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல்.
Fri, 08 Nov 2024 - 07min - 11728 - ஆஸ்திரேலியர்களின் ஆயுட்காலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீழ்ச்சி!
ஆஸ்திரேலியர்களின் ஆயுட்காலம் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சற்று குறைந்துள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Fri, 08 Nov 2024 - 03min - 11727 - US Presidential election: It’s the economy not women’s right that decided - அமெரிக்க அதிபர் தெரிவு: பெண்ணியம் அல்ல, பொருளாதாரம்
Political observer and long-term resident of California Mithiran Karunananthan analyses the US elections with Kulasegaram Sanchayan. - அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் குறித்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா (California) மாநிலத்தில் முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருபவரும், அமெரிக்க அரசியலைக் கூர்ந்து அவதானித்து வருபவருமான மித்திரன் கருணாநந்தன் அவர்களோடு அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Fri, 08 Nov 2024 - 17min - 11726 - இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பிற்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கையில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது; எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யக்கோரி யாழில் மீனவர்கள் போராட்டம். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Fri, 08 Nov 2024 - 08min - 11725 - நாஸி பாணியில் வணக்கம் செலுத்திய நபருக்கு சிறைத்தண்டனை விதித்த விக்டோரிய நீதிமன்றம்Fri, 08 Nov 2024 - 04min
- 11724 - “மனைவி, இரு குழந்தைகளை விட்டுவிட்டு புத்த பிக்குவானேன்”
தமிழ் சமூகத்தில் புத்த சமயத்தை பின்பற்றுகின்றவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற பின்னணியில், தமிழ் சமூகத்தை சார்ந்த புத்த மதகுரு ஒருவரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சந்தித்தது ஆச்சரியமாக இருந்தது. அவரோடு உரையாடியது வித்தியாசமான அனுபவத்தை தந்தது. பிரசாந்த் என்று முதலில் அழைக்கப்பட்ட அவர் இப்போது பந்தே சத்தவிகாரி என்று புத்த துறவியாக அறியப்படுகிறார். அவரை அவரது புத்த மடத்தில் அண்ணாமலை மகிழ்நன் அவர்களுடன் சந்தித்து றைசெல் நீண்ட நேரம் உரையாடினார். அவர் வழங்கிய நேர்முகத்தின் முதற்பாகம்.
Fri, 08 Nov 2024 - 14min - 11723 - தமிழின் மாபெரும் ஆளுமை: தமிழண்ணல்
இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர். மத்திய அரசின் செம்மொழி விருது, தமிழக அரசின் கலைமாமணி மற்றும் திரு.வி.க. விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். அவர் நம்மைவிட்டு மறைந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்தாலும், அவர் 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட வேளையில் நம்முடன் அவர் உரையாடியது காலத்தால் அழிக்க இயலாத பதிவு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Thu, 07 Nov 2024 - 08min - 11722 - ஒன்பது லட்சம் பேரின் பணம் அரசிடம் உள்ளது; எப்படி உரிமை கோருவது?
ஆஸ்திரேலியாவில் Medicare கார்டு வைத்திருக்கும் பல லட்சம் மக்களில் சுமார் 930,000 பேருக்கு சொந்தமான ஆனால் அவர்கள் உரிமை கோராத 241 மில்லியன் டாலர் பணம் தம்மிடம் இருப்பதாக பெடரல் அரசு அறிவித்துள்ளது. இதை எப்படி பெறுவது என்று விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Claire Hain. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
Thu, 07 Nov 2024 - 08min - 11721 - அகதிகள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய பரபரப்பான தீர்ப்பின் விவரம்
காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் அல்லது புகலிட கோரிக்கையாளர்களை கடந்த ஆண்டு சமூகத்தில் வாழ அனுமதித்த அரசு அவர்களுக்கு வழங்கிய நிபந்தனைகள் தொடர்பாக முக்கிய தீர்ப்பை High Court – தலைமை நீதிமன்றம் நேற்று புதன்கிழமை வழங்கியது. அது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் றைசெல்.
Thu, 07 Nov 2024 - 06min - 11720 - Can you leave your kids alone at home? - குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்லலாமா?
Many families have to leave their children unsupervised for a period of time either after school hours or during school holidays. When it comes to child supervision parents have a legal obligation under Australian law but the laws are not very clear on age limits or amount of time a child can be left unattended. Lawyer Henry Pill from Slater and Gordon helps us through the maze of laws that vary from state to state. - குழந்தைகளையோ, சிறுவர்களையோ வீட்டில் தனியாக விட்டுச் செல்லலாமா? இது குறித்து தமிழர்கள் சிலர் என்ன நினைக்கிறார்கள் என்ற அவர்களது கருத்துகளுடன், ஆஸ்திரேலிய சட்டம் என்ன சொல்கிறது என்று சட்ட வல்லுநர் ஒருவருடைய கருத்துகளுடனும் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Thu, 07 Nov 2024 - 11min - 11719 - அமெரிக்க தேர்தலில் Donald Trump அமோக வெற்றிபெற்றார்Thu, 07 Nov 2024 - 04min
- 11718 - மாணவர் கடன்களை 20% தள்ளுபடி செய்வதாக அரசு அறிவிப்பு
ஆஸ்திரேலிய அரசானது HELP எனப்படும் Higher Education Loan Program அல்லது மாணவர் கடனை 20% குறைப்பதாக அறிவித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். On 3 November 2024 the Australian Government announced it will reduce every Australian’s HELP or student loan debt by 20%. This builds on the changes to make HELP and student loan repayments fairer that the Government announced on 2 November 2024.
Thu, 07 Nov 2024 - 06min - 11717 - NSW கடலில் அடித்துச்செல்லப்பட்ட 11 வயதுச் சிறுவனின் உடல் மீட்பு!
கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் The Entrance-இல் 11 வயதுச்சிறுவன் ஒருவன் கடலில் காணாமல் போயிருந்தநிலையில் அச்சிறுவனின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 06 Nov 2024 - 02min - 11716 - பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?
நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது பாகம் இது. இந்நிகழ்ச்சியில் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தியுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 06 Nov 2024 - 17min - 11715 - வரதட்சணை கொடுமை குடும்ப வன்முறையின் ஒரு வடிவமாக அங்கீகரிக்கப்படுகிறது
குடும்பச் சட்டத் திருத்த முன்வடிவு இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது, வரதட்சணை கொடுமை குடும்ப வன்முறையின் ஒரு வடிவமாக அங்கீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 06 Nov 2024 - 08min - 11714 - Superannuation ஓய்வூதிய நிதியை ஒருவர் முன்கூட்டி எடுக்க முடியுமா?
Superannuation ஓய்வூதிய நிதியை ஒருவர் ஒய்வு பெறும் வயதை எட்டுவதற்கு முன்னர் எடுக்க முடியுமா? எதற்கான அத்தியாவசிய தேவைகளுக்கு ஓய்வூதிய நிதியை முன்கூட்டி எடுக்கலாம்? அதற்கான நடைமுறை என்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நியூஜென் கன்சல்டிங் ஆஸ்திரேலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி, பொருளாதாரம், நிதி மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட எமில் எம்மானுவேல் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி.
Wed, 06 Nov 2024 - 10min - 11713 - தமிழக பேசுபொருள்: பிராமணர்களுக்கு பாதுகாப்பு & வர்ணாசிரம எதிர்ப்பு
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தொடர்பான சர்ச்சை, தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் அதன் தொடர்ச்சியாக உருவான சர்ச்சை அடங்கிய தொகுப்பினை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Wed, 06 Nov 2024 - 09min - 11712 - கனடா சீக்கியத் தலைவர் கொலை: இந்தியா தொடர்பு? ஆஸ்திரேலியா கவலைWed, 06 Nov 2024 - 03min
- 11711 - 2025இல் அதிகளவான ஆஸ்திரேலியர்கள் சுற்றுலா செல்லப்போகும் இடங்கள் எவை தெரியுமா?
2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் பயணத்திற்காக அதிக பணம் செலவழிக்கவுள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியப் பயணிகளைப் பொறுத்தவரை, சுற்றுலா செல்வதற்கான பலரது விருப்பத்தெரிவாக ஜப்பான் முதலிடத்தில் உள்ளபோதிலும் அடுத்த ஆண்டு வேறு ஒரு இலக்கை நோக்கிச் அவர்கள் செல்வது போல் தெரிகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Tue, 05 Nov 2024 - 02min - 11710 - வெல்லப்போவது எந்தக் குதிரை? மெல்பன் கப் குதிரைப்பந்தயப் போட்டி இன்று!Tue, 05 Nov 2024 - 04min
- 11709 - He wanted to give back to the community...so Naren collects garbage - மக்களுக்குத் திரும்பக் கொடுக்க நினைத்தார்...அதனால் குப்பைகளை சேகரிக்கிறார் நரேன்
Naren Subramaniam, who immigrated to Australia from Tamil Nadu, has started a company using his knowledge to protect the environment.. - தமிழ் நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்துள்ள நரேன் சுப்ரமணியம் அவர்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, தனது அறிவைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
Mon, 04 Nov 2024 - 11min - 11708 - இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி
இந்தியா கனடா இடையே மிக மோசமான உறவு நிலவி வரும் நிலையில், கனடாவில் உள்ள இந்தியத் தூதர்களை அந்நாட்டு அரசு கண்காணிப்பதாக இந்திய அரசின் குற்றச்சாட்டு மற்றும் திமுக கூட்டணியில் சிக்கலை உருவாக்கும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
Mon, 04 Nov 2024 - 08min - 11707 - அமெரிக்க அதிபர் தேர்தல்: யார் வென்றார் என்பது எப்போது தெரியும்?
அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தேர்தல் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Mon, 04 Nov 2024 - 10min - 11706 - சர்வதேச மாணவர்கள் கடற்கரையில் பாதுகாப்பாக இருக்க புதிய திட்டங்கள்Mon, 04 Nov 2024 - 04min
- 11705 - ஏன் தைவானை இழக்க அமெரிக்காவும், சீனாவும் தயாரில்லை? அப்படி தைவானில் என்ன இருக்கிறது?
ஏன் தைவானை இழக்க மேற்கு தயாரில்லை? சைனாவும் விடுவதாகயில்லை? அதற்கான காரணங்களை விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Sun, 03 Nov 2024 - 10min - 11704 - இந்த வார முக்கிய செய்திகள்Sat, 02 Nov 2024 - 04min
- 11703 - இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சார பணிகள் தீவிரம் பெற்றுள்ளன. இந்த நிலையில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன; இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான 6வது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Fri, 01 Nov 2024 - 08min - 11702 - பிரதமர் சலுகை பெற்றது சரியா இல்லையா?
பத்திரிகையாளர் Joe Aston எழுதி அண்மையில் வெளியாகியுள்ள “The Chairman's Lounge” என்ற நூலில் பிரதமர் Anthony Albanese, அப்போதைய Qantas நிர்வாக அதிகாரியான Alan Joyceஐ தொடர்பு கொண்டு தனது விமானப் பயணத்தில் இருக்கை மேம்பாடு வேண்டுமென்று கோரிக்கை முன் வைத்ததாக எழுதியுள்ளார்.
Fri, 01 Nov 2024 - 11min - 11701 - கோரப்படாத பல மில்லியன் Medicare கட்டணங்களில் உங்கள் பணமும் உள்ளதா?Fri, 01 Nov 2024 - 04min
- 11700 - பெர்த் தீபவாளி: நம்மவர்கள் நம்முடன்
மேற்கு ஆஸ்திரேலிய தலைநகர் பெர்த் நகரில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26 & 27) ஆகிய நாட்களில் தீபாவளி திருவிழா நடைபெற்றது. அவ்வேளையில் SBS தமிழ் ஒலிபரப்பின் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் றைசெல் சில சமூக தலைவர்களை சந்தித்து உரையாடினார். அந்த பதிவுகளின் தொகுப்பு.
Fri, 01 Nov 2024 - 08min - 11699 - What happens when you are summoned for Jury Duty? - Jury சேவை என்பது என்ன? இதற்கு யாரெல்லாம் அழைக்கப்படலாம்?
Every Australian citizen who is on the electoral roll can be called up for jury service. But what is involved if you get called to be a juror? And what is the role of a jury? - Jury- நீதிமன்றத்தில் ஒரு குற்றம்பற்றிய உண்மைகளைக் கேட்டறிந்து ஒருவர் குற்றவாளியா நிரபராதியா என்பதை முடிவுசெய்யும் பொதுமக்கள் சார்ந்த குழுவில் பணியாற்றுவதற்கு நீங்கள் அழைக்கப்பட்டால் என்ன செய்வது என்பது தொடர்பில் Chiara Pazzano ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Thu, 31 Oct 2024 - 09min - 11698 - இலக்கியங்களில் தீபாவளி கூறும் கதைகளும், காரணங்களும்
தீபவாளி குறித்த பல கதைகளையும், காரணங்களையும் இலக்கிய சொல்லாடலுடன் முன்வைக்கிறார் மா.கி.ரமணன் அவர்கள்.
Thu, 31 Oct 2024 - 10min - 11697 - அமெரிக்க விருது வென்ற தமிழ் மீனவப் பெண்
பாடசாலைக்குச் சென்று அதிகம் கற்காவிட்டாலும், கடலில் இருந்து தொடர்ச்சியாகப் பாசி எடுத்தால் அந்த வளம் அழிந்து போகும் என்று அறிந்தது மட்டுமல்ல அதனை சக கிராமத்தவருக்கும் எடுத்துச் சொல்லி, தனது சூழலைப் பாதுகாக்க உழைக்கும் லக்ஷ்மி மூர்த்தி அவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து இயங்கும் Seacology என்ற அமைப்பு 2015ஆம் ஆண்டிற்கான விருதை வழங்கி கௌரவித்திருந்தது.
Thu, 31 Oct 2024 - 11min - 11696 - ‘ஆஸ்திரேலியாவின் புதிய தொழில்நுட்பம்’ – இந்தியாவின் மாசு பிரச்சினையை தீர்க்க உதவுமா?
நீர்நிலைகளில் சிந்தியுள்ள எண்ணெயைப் பிரித்து எடுத்து சுத்தம் செய்யக்கூடிய தொழில்நுட்பம் ஒன்றை ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று உருவாக்கிவுள்ளது. இதனை கொண்டு இந்தியாவின் மாசு பிரச்சனையை தீர்க்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுப்பட்டுள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Cameron Carr எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Thu, 31 Oct 2024 - 06min - 11695 - ஆஸ்திரேலியா கடுமையான காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் - CSIRO & Bureau of MeteorologyThu, 31 Oct 2024 - 04min
- 11694 - மெல்பன் பாடசாலை ஒன்றில் கார் மோதியதில் மாணவர் பலி - முழு விவரம்
மெல்பன் கிழக்கு Hawthorn East புறநகரில் உள்ள Auburn South Primary பாடசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயதான மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரோடு இருந்த மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மெல்பன் Hawthorn East புறநகர் சமூகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த விபத்து சம்பவம் குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Thu, 31 Oct 2024 - 06min - 11693 - மெல்பன் பெண் நிக்கிதா கொலை- காதலன் கைது: பிந்திய தகவல்கள்
மெல்பன் பெண் நிக்கிதாவை கொலை செய்ததாக அவரது காதலன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் இருப்பதால் அவரது முதல் நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாகவில்லை என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 30 Oct 2024 - 02min - 11692 - நடிகர் விஜய் நடத்திய மாநாடு சொல்லும் செய்தி என்ன?
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்து முடிந்திருக்கிறது. விஜயின் அரசியல் வருகை தொடர்பான ஒரு விரிவான தொகுப்பை முன்வைத்திருக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Wed, 30 Oct 2024 - 10min - 11691 - இந்தியர்களுக்கான work and holiday விசா-நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
ஆஸ்திரேலியா இந்தியர்களுக்கு ஆயிரம் work and holiday விசாக்களை இந்த ஆண்டு வழங்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 01 முதல் அக்டோபர் 31 வரை பெறப்பட்டுவருகிறது. விண்ணப்ப தேதி முடிவடைந்ததன் பின்னரான நடைமுறைகள் உட்பட இந்த விசா தொடர்பிலான முக்கிய அம்சங்களை விளக்குகிறார் சிட்னியில் குடிவரவு முகவராக பணியாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 30 Oct 2024 - 10min - 11690 - 3G வலையமைப்பு மூடுதல் : யாரெல்லாம் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்?
Telstra மற்றும் Optus தங்களின் 3G வலையமைப்பின் இயக்கத்தை அக்டோபர் 28-ஆம் தேதி கடந்த திங்கட்கிழமை முதல் நிறுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலும் பிராந்திய மற்றும் கிராமப்புற மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Wed, 30 Oct 2024 - 06min - 11689 - மோசடி அறிவோம்: “வீட்டிலிருந்துகொண்டே இரண்டாவது வேலை செய்யலாம்; பணம் சம்பாதிக்கலாம்”
நிதி நெருக்கடியில் பலரும் சிக்கி தவிக்கும்போது வீட்டிலிருந்துகொண்டே, ஓய்வாக இருக்கும் நேரங்களில், எளிதாக இரண்டாவது வேலை செய்யலாம் என்ற விளம்பரங்கள், குறுஞ்செய்திகள் பலரை கவரக்கூடும். அதிலுள்ள அபாயங்களை விளக்குகிறார் இணைய பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுகின்றவரும், இணைய மோசடி குறித்து முனைவர் பட்டத்திற்காக ஆய்வு மேற்கொண்டுவருபவருமான செந்தில் சிதம்பரநாதன் அவர்கள். Cyber Awareness Week கடைபிடிக்கப்படும் பின்னணியில் செந்திலோடு உரையாடுகிறார் றைசெல். இணைய பாதுகாப்பு குறித்த தொடரின் இரண்டாம் பாகம்.
Wed, 30 Oct 2024 - 12min - 11688 - குவாண்டாஸ் இலவச மேம்படுத்தல்கள் - பிரதமர் மீது குற்றச்சாட்டுWed, 30 Oct 2024 - 03min
- 11687 - சிட்னியில் குத்திக் கொல்லப்பட்ட பிரபா அருண் குமார்: தகவல் தருபவர்களுக்கு $1 மில்லியன் பரிசு!
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி மேற்கில் வைத்து இந்தியப்பெண் பிரபா அருண் குமார் கொலைசெய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கைத் தீர்க்க உதவும் புதிய தகவல்களைத் தருபவர்களுக்கு 1 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Tue, 29 Oct 2024 - 02min - 11686 - ஆஸ்திரேலியாவில் வீட்டு விலை வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதுTue, 29 Oct 2024 - 03min
- 11685 - குயின்ஸ்லாந்து மாநில தேர்தல்: எதிர்பார்த்த முடிவுகள் தானா?
குயின்ஸ்லாந்து மாநில தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியிடப் படாவிட்டாலும், Premier Steven Miles தனது கட்சியின் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.
Mon, 28 Oct 2024 - 10min - 11684 - NSW அரசு சட்டவிரோதமாக கட்டணங்கள் அறவிட்டுள்ள பலரில் நீங்களும் ஒருவரா?
New South Wales மாநிலத்தில் அரச சேவைகளுக்காக, மக்கள் பணம் செலுத்தும் போது, தேவைக்கதிகமாக கட்டணம் செலுத்தியுள்ளார்கள் என்று அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Mon, 28 Oct 2024 - 06min - 11683 - Firecrackers, Sweets, and Parai drums: Celebrating Deepavali the Australian way - பட்டாசு, பலகாரம், பறை......ஆஸ்திரேலிய தீபாவளி அனுபவங்கள்!
The Kannada, Tamil, Malayalam, and Telugu-speaking communities of South Indian heritage in Australia share their beliefs about Deepavali and the unique ways they celebrate the festival. Participants: Smitha Balu, Suresh Hebbal Shivashankarappa, Pramila Shanmuga Ganesan and Laxmi Jyothsna. Produced by Janani Karthick & RaySel. - ஆஸ்திரேலியாவில் வாழும் தென்னிந்தியாவை பின்னணியாக கொண்ட கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழி பேசும் சமூகங்களை சார்ந்தவர்கள் தீபாவளி குறித்து கொண்டிருக்கும் நம்பிக்கைகளையும், அவர்களின் கொண்டாட்ட முறைகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்: ஸ்மிதா பாலு, சுரேஷ் சிவசங்கரப்பா, பிரமிளா கணேஷ், லட்சுமி ஜியோத்சனா. நிகழ்ச்சி தயாரிப்பு: ஜனனி கார்த்திக் & றைசெல்.
Mon, 28 Oct 2024 - 13min - 11682 - இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களை உலுக்கிய டானா புயல், வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை, பிரமாண்டமாக நடைபெற்ற நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Mon, 28 Oct 2024 - 09min - 11681 - Telstra மற்றும் Optus இன்று தங்களின் 3G வலையமைப்பை மூடுகின்றன!Mon, 28 Oct 2024 - 04min
- 11680 - இந்த வார முக்கிய செய்திகள்Sat, 26 Oct 2024 - 05min
- 11679 - உங்களது வருமானவரியைத் தாக்கல் செய்துவிட்டீர்களா? காலக்கெடு நெருங்குகிறது!
ஆஸ்திரேலியர்கள் 2023-24 நிதியாண்டுக்கான tax return வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிவிட்டது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Fri, 25 Oct 2024 - 02min - 11678 - How to build your own house in Australia - ஆஸ்திரேலியாவில் உங்கள் சொந்த வீட்டைக் கட்டும்போது கவனிக்க வேண்டியவை
Building a house in Australia is a dream for many, but what are the essential steps to achieving it? While buying an existing home may seem straightforward, the process of purchasing land and constructing your own house requires careful planning and consideration. Here's how you can navigate building your own home in Australia. - ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டைக் கட்டுவது என்பது பலரின் கனவாக இருக்கும், ஆனால் அதை அடைவதற்கான அத்தியாவசிய படிகள் என்னவென்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆஸ்திரேலியாவில் உங்கள் சொந்த வீட்டைக் கட்டும்போது கவனிக்கவேண்டியவை தொடர்பில் Afnan Malik ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Fri, 25 Oct 2024 - 10min - 11677 - மலையக மக்களின் விடிவெள்ளியாய் களம் கண்டவர்
இலங்கை மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மறைந்த 25 ஆவது நினவு தினம் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இவ்வேளையில் தொண்டமான் குறித்த “காலத்துளி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Fri, 25 Oct 2024 - 03min - 11676 - இலங்கையில் இந்த வாரத்தில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்; வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்க மக்கள் கோரிக்கை; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கையை வெளியிட்ட உதய கம்பன்பில, பல்வேறு தரப்பினரும் இது தொடர்பில் கருத்து. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Fri, 25 Oct 2024 - 09min - 11675 - “பண வீக்கம் மிதமான நிலைக்கு வந்துள்ளது" - நிதி அமைச்சர்Fri, 25 Oct 2024 - 05min
- 11674 - ஆஸ்திரேலியாவில் வீதிச்சாவடிக் கட்டணங்கள் தொடர்ந்தும் அதிகரிக்கும்!
சிட்னி, மெல்பன் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் உள்ள Transurbanனின் வீதிச்சாவடிக் கட்டணங்கள் மேலும் உயரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Australians are paying more than $3 billion per year to use toll roads in the three major capitals, and costs are set to keep rising and threatening to change how we use private transport.
Thu, 24 Oct 2024 - 06min - 11673 - விக்டோரியர்களுக்கான புதிய பொது விடுமுறை தொடர்பில் மாநில அரசுடன் பேச்சு!
விக்டோரியர்களுக்கான புதிய பொது விடுமுறை ஒன்று தொடர்பில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பூர்வீகக் குடிமக்களுடனான Treaty-உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட உள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Thu, 24 Oct 2024 - 02min - 11672 - மெல்பர்ன் பெருநகரின் வீடு பற்றாக் குறைக்கு இது தீர்வாகுமா?
ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் நிலவும் வீடு பற்றாக்குறைக்கு அந்தந்த மாநில அரசுகள் புதிய புதிய கொள்கைகளை அறிவித்துவரும் பின்னணியில், விக்டோரியா மாநில பிரீமியர் Jacinta Allan அவர்கள் இரு கொள்கைகளை அதிரடியாக அறிவித்துள்ளார். அந்த கொள்கைகள் குறித்த விளக்கமும், அலசலும், இன்றைய செய்தியின் பின்னணி நிகழ்ச்சியாக ஒலிக்கிறது. இந்த திட்டம் குறித்து அலசவுள்ளார் பொறியியல் துறையில் விருதுகள் வென்ற Swinburne பல்கலைக் கழக பேராசிரியர் சண்குமார் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Thu, 24 Oct 2024 - 10min - 11671 - சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த மொழியியல் அறிஞர்
அ. கி. ராமானுஜன் அவர்கள் ஒரு இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளையும் ஆராய்ந்து நூல்களை எழுதியவர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழை நிலைப்படுத்துவதற்கு முயற்சி செய்தவர். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பெருமைக்குரியவர். தமிழுக்கு அருந்தொண்டாற்றிய அ. கி. ராமானுஜன் குறித்து தமிழ்த்தடம் நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் தனபாலசிங்கம் அவர்கள்.
Thu, 24 Oct 2024 - 07min - 11670 - பேய் உலா வரும் நேரம் வருகிறதுThu, 24 Oct 2024 - 11min
- 11669 - புகலிடகோரிக்கையாளர்களின் பேரணிக்கு எதிராக இனவெறியுடன் நடந்தவர்கள்மீது நடவடிக்கை – விக்டோரிய பிரீமியர்Thu, 24 Oct 2024 - 04min
- 11668 - Rumours, Racism and the Referendum - SBS Examines : வதந்திகள், இனவாதம் மற்றும் வாக்கெடுப்பு
Misinformation and disinformation were rife during the referendum. The effects are still being felt a year on. - Voice to Parliament என்ற கட்டமைப்பு குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு தோல்வியடைந்து இப்போது, ஒரு வருடத்திற்குப் பிறகு பொய்யான மற்றும் தவறான தகவல் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்ற கேள்வியெழுப்பப்படுகிறது.
Thu, 24 Oct 2024 - 07min - 11667 - Incoming Passenger அட்டையை டிஜிட்டல் முறையில் நிரப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள Qantas!
ஆஸ்திரேலியாவிற்கு விமானம் அல்லது கப்பலில் வருபவர்கள், தமது தங்குமிடம் மற்றும் நாட்டிற்கு என்ன பொருட்களை கொண்டு வந்துள்ளனர் என்பதை தெரிவிக்கும், Incoming Passenger Card உள்வரும் பயணிகள் அட்டையை டிஜிட்டல் முறையில் நிரப்பும் வசதியை பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கையை Qantas நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 23 Oct 2024 - 02min - 11666 - இனப்படுகொலைக்கு மன்னர் உடந்தை என்று மன்னர் முன்னால் செனட்டர் Thorpe கூச்சலிட்டது சரியா?
ஆஸ்திரேலியா வருகை தந்த மன்னர் சார்லஸுக்கு எதிராக பூர்வீக மக்கள் பின்னணி கொண்ட செனட்டர் லிடியா தோர்ப் கூச்சலிட்டது உலகளாவிய தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இதனையடுத்து செனட்டர் லிடியா தோர்ப் நடந்துகொண்ட முறை சரிதானா என்ற விவாதம் நாட்டில் எழுந்துள்ளது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Anna Henderson மற்றும் Sophie Bennett. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
Wed, 23 Oct 2024 - 07min - 11665 - மெல்பனில் அகதிகள் பேரணிக்கு இடையூறு விளைவித்த Neo-Nazis குழு!
ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பின்னணியில் மெல்பனில் நடைபெற்ற போராட்டம் நேற்று அக்டோபர் 22ம் திகதியுடன் 100 நாட்களை எட்டியிருந்தது. இதையொட்டி நேற்று மெல்பன் நகரில் இடம்பெற்ற மாபெரும் பேரணியில் நியோ நாசிக்கள் குழுவொன்று குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளரான ரதி அவர்களின் கருத்துக்களுடன் விவரணமொன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 23 Oct 2024 - 05min - 11664 - இரண்டு குழந்தைகளுடன் நீரில் மூழ்கிய சிட்னி பெண்: நடந்தது என்ன?
சிட்னியில் வியட்நாமியப் பின்னணிகொண்ட ஒரு இளம் தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் Georges ஆற்றில் மூழ்கி மரணமடைந்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Wed, 23 Oct 2024 - 07min - 11663 - QLD தேர்தல்: நான்கு ஆண்டுத் திட்டங்கள் தொடர்பில் இறுதி விவாதம்Wed, 23 Oct 2024 - 02min
- 11662 - ‘திராவிட நல் திருநாடும்’: தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை
தமிழ்நாட்டில் "தமிழ்த்தாய் வாழ்த்து" தொடர்பான சர்ச்சை தமிழக அரசியலில் ‘ஆரியம், இந்தி, சமஸ்கிருதம்’ என பெரும் கருத்துப்போரை நிகழ்த்தி ஓய்ந்திருக்கிறது. இது தொடர்பான ஒரு விரிவான தொகுப்பை முன்வைத்திருக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Wed, 23 Oct 2024 - 12min - 11661 - மெல்பனில் அகதிகள் மேற்கொண்ட போராட்டம் 100 நாட்களை எட்டியது!
ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் மெல்பனில் நடைபெற்றுவரும் போராட்டம் இன்றுடன்(22/10/24) 100 நாட்களை எட்டியுள்ளது. 24x7 என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் இத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு வாரத்திற்கு ஒரு தடவை என்பதாக இது மாற்றியமைக்கப்படவுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தனு அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
Tue, 22 Oct 2024 - 10min - 11660 - காஸா சூழ்நிலையை எதிர்க்கட்சி அரசியல்மயப்படுத்துவதாக Attorney-General குற்றச்சாட்டுTue, 22 Oct 2024 - 03min
- 11659 - Palliative care இறுதிக்கால சிகிச்சை என்றால் என்ன? அதனை எவ்வாறு திட்டமிடுவது?
Palliative care இறுதிக்கால சிகிச்சை என்றால் என்ன? இந்த சேவையை யாரெல்லாம் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்? அதற்கான நடைமுறை என்ன? போன்று Palliative care குறித்து பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் முதியோர் நல வைத்தியர் Dr பூரணி முருகானந்தம் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் செல்வி.
Tue, 22 Oct 2024 - 12min - 11658 - ஆஸ்திரேலியா இந்தியர்களுக்கு வழங்கும் 1000 Working Holiday விசாவுக்கு இரு வாரத்தில் 40,000 விண்ணப்பங்கள்!
ஆஸ்திரேலியா இந்தியர்களுக்கு ஆயிரம் Working Holiday விசாக்களை இந்த ஆண்டு வழங்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 01 முதல் பெறப்பட்டுவருகிறது. ஆனால் முதல் இரண்டு வாரங்களிலேயே 1,000 இடங்களுக்கு சுமார் 40,000 இந்தியர்கள் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mon, 21 Oct 2024 - 01min - 11657 - Understanding vaccination rules for children in Australia - ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி விதிகள் எவை?
Did you know that one in five children is at risk of dying from a disease that is now preventable through vaccination? Australia’s vaccination program helps to prevent severe outcomes from many childhood infections. To access family support payments—and in some states, childcare services—your child must be fully immunised according to the national schedule. - உங்கள் பிள்ளைக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதிசெய்வது அவரைப் பாதுகாக்கிறது மற்றும் அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பயனளிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவேண்டியதன் அவசியம் தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
Mon, 21 Oct 2024 - 08min - 11656 - Dr. Raghavi Jayakumar: First Australian Tamil Woman to Win the Rhodes Scholarship - Dr ராகவி ஜெயக்குமார்: Rhodes புலமைப்பரிசில் வென்ற முதல் ஆஸ்திரேலிய தமிழ்ப்பெண்
The Rhodes Scholarship, established in 1902, is the oldest and one of the most prestigious graduate scholarships in the world. Awarded to international postgraduate students at the University of Oxford in England, the scholarship has been granted to around 175 Australians so far. - பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களில் மிகவும் பழமையானது Rhodes புலமைப்பரிசில் . இங்கிலாந்திலுள்ள ஒக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கற்கும் சர்வதேச முதுகலை மாணவர்களுக்கான இந்த விருது 1902ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவரை இந்தப் புலமைப்பரிசில் சுமார் 175 ஆஸ்திரேலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Mon, 21 Oct 2024 - 09min - 11655 - இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
இந்தியாவில் ஒரே நாளில் 20 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல், இந்திய மீனவர்களை பாதுகாக்க இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வழக்கு, தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை மற்றும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் நடிகர் விஜய்யின் தவெக மாநாடு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Mon, 21 Oct 2024 - 09min - 11654 - மன்னராட்சி தேவையா என்ற கேள்வி வலுப்பெறுகிறதா?
மன்னர் மூன்றாவது Charlesஉம் அவர் மனைவி, இராணி Camilla அவர்களும் தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள்.
Mon, 21 Oct 2024 - 09min - 11653 - மன்னர் சாள்ஸ் மற்றும் ராணி கமீலா இன்று கன்பரா செல்கின்றனர்!Mon, 21 Oct 2024 - 04min
- 11652 - இந்த வார முக்கிய செய்திகள்Sat, 19 Oct 2024 - 05min
- 11651 - நோபல் பரிசுகள் 2024: யாருக்கு? ஏன்?
உலகில் 2024ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம், பௌதிகம்/இயற்பியல், இரசாயனம், பொருளாதாரம், இலக்கியம், அமைதி துறைகளில் நோபெல் பரிசு பெறுகின்றவர்களையும், அதற்கான காரணங்களையும் விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Fri, 18 Oct 2024 - 12min - 11650 - Ashvini Ambihaipahar: The Tamil woman to win elections again - அஷ்வினி அம்பிகைபாகர்: தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற தமிழ்ப்பெண்
In the recent local government elections in New South Wales, 17 Tamil candidates participated. Among them, Ashvini Ambihaipahar emerged victorious as a Labor Party candidate in the Mortdale Ward of the Georges River constituency, securing a safe win. - அண்மையில் NSW மாநிலத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 17 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில், Georges River தொகுதி Mortdale Ward பகுதியில் Labor கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட அஷ்வினி அம்பிகைபாகர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
Fri, 18 Oct 2024 - 06min
Podcasts similar to SBS Tamil - SBS தமிழ்
- El Partidazo de COPE COPE
- Herrera en COPE COPE
- Tiempo de Juego COPE
- Es la Mañana de Federico esRadio
- La Noche de Dieter esRadio
- Hondelatte Raconte - Christophe Hondelatte Europe 1
- Affaires sensibles France Inter
- La rosa de los vientos OndaCero
- Más de uno OndaCero
- La Zanzara Radio 24
- Les Grosses Têtes RTL
- L'Heure Du Crime RTL
- El Larguero SER Podcast
- Nadie Sabe Nada SER Podcast
- SER Historia SER Podcast
- Todo Concostrina SER Podcast
- 安住紳一郎の日曜天国 TBS RADIO
- TED Talks Daily TED
- 辛坊治郎 ズーム そこまで言うか! ニッポン放送
- 飯田浩司のOK! Cozy up! Podcast ニッポン放送
- 武田鉄矢・今朝の三枚おろし 文化放送PodcastQR
Other News & Politics Podcasts
- The Ray Hadley Morning Show 2GB
- Ben Fordham Live on 2GB Breakfast Radio 2GB
- The Bolt Report Sky News Australia / NZ
- You Cannot Be Serious Sam Newman
- Dateline NBC NBC News
- Credlin Sky News Australia / NZ
- Nights with John Stanley 2GB & 4BC
- Paul Murray Live Sky News Australia / NZ
- The Tucker Carlson Show Tucker Carlson Network
- Ukraine: The Latest The Telegraph
- The Megyn Kelly Show SiriusXM
- Global News Podcast BBC World Service
- Sky Sports Radio's Big Sports Breakfast Sky Sports Radio
- The Dan Bongino Show Cumulus Podcast Network | Dan Bongino
- Australia Overnight with Clinton Maynard 2GB
- 3AW Mornings with Tom Elliott 3AW
- Late Night Live - Full program podcast ABC listen
- SBS Indonesian - SBS Bahasa Indonesia SBS
- UFO WARNING UFO WARNING
- The Sean Hannity Show Sean Hannity
SBS Arabic24 Podcasts
- SBS Vietnamese - SBS Việt ngữ SBS
- SBS Cantonese - SBS廣東話節目 SBS
- SBS Nepali - एसबीएस नेपाली पोडकास्ट SBS
- SBS Mandarin - SBS 普通话电台 SBS
- SBS Tigrinya - ኤስ.ቢ.ኤስ ትግርኛ SBS
- SBS Bangla - এসবিএস বাংলা SBS
- SBS Bulgarian - SBS на Български SBS
- SBS Lao - SBS ພາສາລາວ SBS
- SBS Malayalam - എസ് ബി എസ് മലയാളം പോഡ്കാസ്റ്റ് SBS
- SBS Hindi SBS
- SBS Japanese - SBSの日本語放送 SBS